மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் டிம் பெய்ன், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்டை கிண்டல் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 443 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் எடுத்து டிக்ளர் செய்தது.
அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய அவுஸ்திரேலியா அணி பும்ராவின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் 151 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
வெறும் 15.5 ஓவர்கள் மட்டுமே வீசிய பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணியை கதிகலங்க வைத்தார். இதையடுத்து 399 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் அவுஸ்திரேலியா அணி சற்று முன் வரை 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் அவுஸ்திரேலியா வீரர்களை இளம் வீரர் ரிஷப் பாண்ட் கீப்பிங் பணி செய்யும் போது தொடர்ந்து சீண்டி வருகிறார்.
Tim Paine doing some recruiting for the @HurricanesBBL out in the middle of the 'G… ? #AUSvIND pic.twitter.com/6btRZA3KI7
— cricket.com.au (@cricketcomau) December 28, 2018
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரிஷப்பாண்ட் முதல் இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்த போது, அவுஸ்திரேலியா அணியின் கீப்பரும், தலைவருமான டிம் பெய்ன் கிண்டலடித்துள்ளார்.
அதில், ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார், நாம் இவரை ஹோபார்ட் ஹரிகேன்ஸுக்கு எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு பேட்ஸ்மென் தேவை.
அவுஸ்திரேலியா விடுமுறையை கொஞ்சம் நீட்டு, ஹோபார்ட் மிக அழகான நகரம், அங்கு இவருக்கு நல்ல வாட்டர்பிரண்ட் அபார்ட்மெண்ட்டை அளிக்கலாம். நான் என் மனைவியை சினிமாக்கு அழைத்துச் செல்லும் போது நீ என் குழந்தைகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.