மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இஸ்லாம் மக்களின் புனித மாதமாக கருதப்படுகின்ற ரமழான் மாதம் இடம்பெற்று வருகின்றது.
ரமழான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்கள் பாரிய செலவில் அலங்கரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமையாகும்.
அதற்கமைய குட்டி அரபு நாடு போன்று காத்தான்குடி நகரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பின்தங்கிய நிலையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நகரம் இன்று பார்ப்பர்வர்களை ரசிக்கும்படி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடிக்கு சென்று வருபவர்கள் குட்டி அரபு நாட்டுக்கு சென்று வந்த உணர்வு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.