ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக அண்டனியோ குட்டேரஸ் (Antonio Guterres) இன்று பதவியேற்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையிலேயே அண்டனியோ குட்டேரஸ் இன்று புதிய செயலாளர் நாயகமாக பதவி ஏற்கவுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபையின் வலைத்தளத்தில் இந்தத் தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
போரத்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமரான அண்டனியோ குட்டேரஸ் கடந்த 2005 முதல் 2015 வரை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக பதவி வகித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகம் அண்டனியோ குட்டேரஸ் எவ்வாறான நிலைப்பாட்டை கையாள்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் பார்வை ஆசிய நாடுகள் மீது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களுடைய இலங்கை மீதான பார்வை எப்படி இருக்கும், நன்மையா இல்லது தீமையா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.