ட்ரம்ப் டவருக்குள் ஆயுதங்களுடன் நுழைய முயற்சித்த 19 வயது கல்லூரி மாணவன் ஒருவரை கைது செய்துள்ளதாக நியூயோர்க் பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை மாலை Alexander Wang என்ற மாணவன் கடுமையான பாதுகாப்புடன் உள்ள 721 மாடி கட்டடத்திற்கு செல்ல முயற்சித்துள்ள நிலையிலேயே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரகசியப்பிரிவு முகவர்கள் குறித்த இளைஞரின் பையை சோதித்த போது ஒரு பெரிய கத்தி, கைவிலங்குகள், தண்ணீர் துப்பாக்கி, M100 வெடிகள் மற்றும் garrote என்ற கயிறும் மீட்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
garrote என்ற கயிறு ஒரு நபரின் கழுத்தை நெரிக்க பயன்படுத்தும் ஒன்றாகும்.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் பெரும்பாலான நேரத்தை அந்தக் கட்டடத்திலேயே செலவிடுகிறார். அங்கு பல்வேறு சந்திப்புக்களையும் தொடர்ந்து நடத்திவருகிறார்.
பல பிரபலங்களும், முக்கிய நபர்களும் வந்து செல்லும் அந்த கட்டடத்தில் ஆயுதங்களுடன் ஒரு மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும், குறித்த கல்லூரி மாணவரின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை எனவும் நியூயோர்க் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.