கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண முடியாமல் போனதை நினைத்து நடிகை ப்ரியா ஆனந்த் ட்விட்டரில் கண்ணீர் வடித்துள்ளார். கபாலி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து வருகிறார்கள்.
கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். Buy Tickets பலர் தியேட்டரில் செல்ஃபி எடுத்து வெளியிடுகிறார்கள். இப்படி ஆளாளுக்கு கபாலி திருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது நடிகை ப்ரியா ஆனந்த் மட்டும் கவலையில் உள்ளார்.
காரணம் அவரால் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசிக்க முடியவில்லை. இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இன்று படப்பிடிப்பில் உள்ளேன். கபாலியை பார்க்க விடுப்பு கிடைக்கவில்லை என்று கூறி கண்ணீர் சிந்தியுள்ளார்.