தகவல் அறியும் உரிமை யாருக்காக? எதற்காக? மக்கள் கலந்துரையாடல் கிளிநொச்சியில்

327

தகவல் அறியும் உரிமை யாருக்காக? எதற்காக? எனும் மக்கள் கலந்துரையாடல் நிகழ்வு கிளிநொச்சி பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.

ஊடக ஊழியர்களின் தொழில் சங்க சம்மேளனம், வட மாகாண தொழிசார் ஊடகவியலாளர்களின் சங்கம், கிளிநொச்சி ஊடகவியலாளர் அமையம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தகவல் அறியும் சட்டமூலம் பற்றியும் அதன் சாதக பாதக நிலைமைகள் தொடர்பிலும் விரிவாக பேசப்பட்டதோடு, உலகில் 192 நாடுகளில் தகவல் அறியும் சட்டம் நடைமுறையில் இருக்கின்ற  போதும் இலங்கையில் அது இன்னமும் சட்ட வரைபாக மட்டுமே காணப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டதோடு தகவல்    அறியும் சட்டம் கொண்டு வரப்பட்டால் பொது மக்கள் ஊடகவியலாளர்களுக்கு அதனால் ஏற்படுகின்ற நன்மைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் தகவல் அறியும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அதன் பின்னர் நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகள்  பற்றியும் பேசப்பட்டது.

SHARE