தகுதி இல்லாத இழிவான ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராய் நியமித்த செயலிற்கெதிராக தமிழராய்ஒன்றிணைவோம்.
1) ஹிஸ்புல்லா தான் பிறந்து வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தில் பண ரீதியான இலாபங்கள் தரக்கூடிய ஸ்தாபனங்களை வைத்திருக்கிறார் எனவும்,
2) அவர் தனது ஆளுநர் அதிகாரங்களை தனக்கு சார்பாகவும் முஸ்லிம்களுக்கு சார்பாகவும் பயன்படுத்தி, தமிழரின் நலன்களிற்கு எதிராகவும், தமிழரின் அரசியல் உரிமைகளிற்கு பங்கம் விளைவிக்கவும் இயைபான வாய்ப்புக்கள் அவரிற்கு தோன்றியுள்ளதையும்,
3) கிழக்கு மாகாணத்தில் உள்ள காளி கோவில் ஒன்றை, தான் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்து, அந்த பதவியைப் பயன்படுத்தி அபகரித்து அதை முஸ்லிம் பள்ளிக்கும், அதில் ஒரு பகுதியை சந்தைக்கும் கொடுத்தேன் எனவும் வழங்கிய வாக்குமூல ஒலிஒளிநாடாவையும் ஆதாரமாக காட்டியும்,
4) கிழக்கு மாகாணத்தில், மத்திய கிழக்கு நாடுகளின் நிதி உதவியுடன் கட்டப்பட்டுவரும் #அரபு #கல்லூரி ஒன்றின் கட்டுமானங்களில், #ஊழல் செய்த வழக்கு ஒன்று கிழக்கு மாகாண நீதிமன்றில் நிலுவையில் உள்ள விடயத்தையும் சுட்டிக்காட்டியும் அதில் தொடர்ந்தும் #சந்தேக #நபராக#ஹிஸ்புல்லா இருப்பதை சுட்டிக்காட்டியும்,
5) இவை கிழக்கு மாகாண மக்கள் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கிய #நிறைவேற்று #அதிகாரத்திற்கு எதிரான செயல் என்பதால், ஹிஸ்பில்லாவை ஆளுநராக நியமித்தமை அரசியலமைப்பு சட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தத்துக்கு முரணான, அரசியலமைப்பிற்கு விரோதமான செயல் எனவும்,
6) ஏற்கனவே துர்நடத்தை, கிழக்கு மாகாணத்தில் அதிகாரத் துஸ்பிரயோகம் போன்ற செயல்களில் ஈடுபட்டமை மற்றும் அதற்கான சான்றுகள் முரண்பாடுகள் முறைப்பாடுகள் என்பவற்றை தொகுத்து கொடுத்தும்,
7) இது தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் அத்துடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்தும் இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாண மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் த.தே.கூட்டமைப்பை சேர்ந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் தீர்மானம் நிறைவேற்றியும் ஒப்பமிட்டும் எமது ஐனாதிபதி அதிஉத்தம மைத்தரிபால சிறிசேனவிற்கு மகஜர் (Petition) ஒன்றை தயாரித்து உடனடியாக அனுப்பி வைக்குமாறு கோருகின்றேன்.
தமிழ் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் இது தொடர்பில் உடனடியாக விசேட கூட்டம் ஒன்றை கூட்டுமாறும் ஹிஸ்புல்லாவை ஆளுநர் பதவியில் இருந்து அகற்றுமாறு கோரி ஓர் தீர்மானம் நிறைவேற்றுமாறும் கோருகின்றேன்.
இவ் விடயம் தொடர்பில் தமிழர் அனைவரும் சரியாகவும் விரைவாகவும் செயற்பட வேண்டிய தருணம் இது என்பதை பொறுப்புடன் கூறிவைக்கிறேன்.
ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க உச்ச நீதிமன்றில் போராடிய த.தே.கூட்டமைப்பும் குறிப்பாக ஜனாதிபதி சட்டத்தரணி Mathiaparanan Abraham Sumanthiranஅவர்களும், கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க, உச்சநீதிமன்றில் இன்னொரு எழுத்தாணை விண்ணப்பம் ஒன்றை ஹஸ்புல்லாவின் நியமனத்திற்கு எதிராக தாக்கல் செய்வார்களா என்ற கேள்வியையும் முன்வைக்கிறேன்.
ஹிஸ்புல்லாவை ஆளுநர் பதவியில் இருந்து அகற்றி, கிழக்கு தமிழரை பாதுகாக்க அரசியல் ரீதியிலும் சட்ட ரீதியாகவும் தற்போது முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.
(சிறிய அளவிலான அரசியல் அதிகாரம்கூட, என்னிடம் இல்லாமையை நினைத்து இந்தக்கணம் வேதனையாக உள்ளது. ஏதேனும் வகையில் எனக்கு அரசியல் அதிகாரமோ அல்லது மக்கள் பிரதிநிதி என்ற அங்கீகாரமோ கிடைத்திருந்தால், இந்த ஹிஸ்புல்லாவை அரசியல் ரீதியிலும் சட்ட ரீதியிலும் இன்னும் வலுவாக எதிர்த்து ஒரு வழி பண்ணியிருப்பேன்…)
தமிழராய் இணைவோம்…கிழக்கு மண்ணை மீட்போம்.