தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த தங்கமகன் பெரும் நஷ்டத்தை அடைந்தது. இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரித்தது.
இப்படம் சுமார் ரூ 10 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகின்றது. இதனால், தயாரிப்பு நிறுவனம் தனுஷ் மீண்டும் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என கேட்டுள்ளது.
இதற்கு மௌனமாக இருந்த தனுஷ் தற்போது தலையாட்டியுள்ளாராம். விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.