தங்கமகன் மாரியப்பன் பாகிஸ்தானைச் சேர்ந்தவரா? ரசிகர் கேட்ட நெத்தியடி கேள்வி

518

பிரபல தனியார் வங்கியின் விளம்பரத்தில் புறக்கணிக்கப்பட்ட தங்கமகன் மாரியப்பன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரா என ரசிகர் ஒருவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது பிரேசிலில் நடைபெற்று முடிந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மாரியப்பன் உயரம் தாண்டுதலில் தங்கமும், தேவேந்திர ஜாஜாரியா ஈட்டி எறிதலில் தங்கமும், தீபா மாலிக் குண்டு எறிதலில் வெள்ளியும், வருண் பாட்டியா உயரம் தாண்டுதலில் வெண்கலமும் வென்று அசத்தினர்.

இதில் பிரபல தனியார் வங்கி ஒன்று தாம் வெளியிட்ட விளம்பரத்தில் பாரா ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்ற இந்திய பராலிம்பியன்களின் விளையாட்டுத் திறமையை பரவச் செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தது.

இதில் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதலில் தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பனைத் தவிர மற்ற வீரர்களின் புகைப்படங்கள் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்து.

625-0-560-320-500-400-194-800-668-160-90

இது ரசிகர்கள் பலரிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தியாவிற்கு தங்கம் வென்று பெருமை சேர்த்த மாரியப்பன் பாகிஸ்தானைச் சேர்ந்தவரா அவரை ஏன் நிராகரித்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த அந்நிறுவனம், மாரியப்பன் விவகாரத்தில் எந்த பிராந்திய இன வேறுபாடும் பார்க்கவில்லை என்றும் அந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள பாராலிம்பியன்ஸ் அத்தனை பேரும் பெங்களுருவில் உள்ள கோஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷன் சார்பாக நடத்தும் பாரா சாம்பியன்ஸ் புரோகிராமில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர்கள். அந்த வகையில்தான் விளம்பரப்படுத்தப்பட்டனர். அந்த ஒப்பந்தத்தில் மாரியப்பன் இல்லாத காரணத்தினால், விளம்பரத்தில் இடம் பெறவில்லை என விளக்கமளித்துள்ளது.

மேலும் மாரியப்பனின் வெற்றி சிறப்பானது ஆகும். அவரது சாதனைகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அதே வேளையில் ஒப்பந்தம் என்ற வகையில் வேறு யாரையும் எங்கள் விளம்பரத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

625-0-560-320-500-400-194-800-668-160-90-1

SHARE