சகோதரன் ஒருவன் தன் சகோதரியை மறைத்து வைத்து விட்டு தன் தந்தையிடம் பணம் கோரியமை தொடர்பில் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சகோதரன் தொலைபேசி அழைப்பினூடாக வேறு குரலில் கதைத்து ரூபா 5 இலட்சம் தன் தந்தையிடம் கோரியுள்ளார்.
குறித்த மகன்(17)வீட்டில் உள்ள மூவரில் மூத்தவன் என்றும் இவர்களின் தாய் வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றமையினால் பிள்ளைகளை தந்தையின் பாதுகாப்பில் விட்டு சென்றுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தந்தை தெரிவிக்கையில்,
தன் மகன் சங்கீத குழுவில் இணைவதற்காக ரூபா 5 இலட்சம் கேட்டதாகவும் இதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தன் 15 வயது மகள் திடீரென காணாமல் போனதாகவும் பின் மகனும் இணைந்து தேடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் உன் மகளை விடுவிக்க வேண்டுமாயின் 5 இலட்சம் வேண்டும்’ என ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் குறித்த தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு வழங்கிய முறைபாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.பின்னர் குறித்த மகள் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுமியிடன் விசாரணைகள் மேற்கொண்ட போது குறித்த சிறுமி நடந்ததை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து குறித்த சகோதரனை கம்பஹா பொலிஸார் கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.