தங்கையை கொன்று உடல் உறுப்புகளை குப்பை தொட்டியில் வீசிய அண்ணன்

223

இத்தாலி தலைநகர் ரோமில் தெருவோர குப்பை தொட்டியில் இருந்து உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் நபர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக 62 வயதான Maurizio Diotallevi என்பவர் ரோம் நகர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் அன்று இரவு இளம்பெண் ஒருவர் தமது குடியிருப்பின் அருகே உள்ள குப்பை தொட்டியில் கிளறியபோது மனித உடல் உறுப்பு ஒன்று கிடப்பதை கண்டுள்ளார்.

உடனடியாக அந்த இளம்பெண் அருகாமையில் உள்ள பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவயிடத்துக்கு விரைந்து வந்த பொலிசார், குறித்த குப்பை தொட்டியில் இருந்து வெட்டப்பட்ட மனித தலை ஒன்றை கண்டெடுத்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த பொலிசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அந்த பகுதியில் உள்ள மேலும் பல குப்பை தொட்டிகளில் இருந்து கை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகளையும் கண்டெடுத்தனர்.

இதனையடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் 62 வயதான Maurizio Diotallevi என்பவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

இந்த நிலையில் Maurizio Diotallevi தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், கொலை செய்யப்பட்ட நபர் தமது தங்கை Nicoletta Diotallevi(59) என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ரோம் நகரில் உள்ள Flaminio பகுதியில் சகோதரர்கள் இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். தமது தங்கையை அந்த நபர் ஏன் கொலை செய்தார் என்பதை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.

இருப்பினும் குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

SHARE