சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.