தங்க நகையகங்களில் ஒரு கோடி பத்து லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளுக்கு, கொட்டே நீதவான் நேற்று சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளுக்கும், கோட்டே நீதவான் பிரியந்த லியனகே தலா இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
நஜூமான் அப்சால் மற்றும் அசான் மலிக் ஆகிய பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைகளே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு நபர்களுக்கும் தலா 3500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள தங்க நகையகங்களுக்குச் சென்று அங்கு கடயைமாற்றுவோரை மயக்கமடையச் செய்து பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.
கொள்ளையிட்ட தங்க ஆபரணங்கள் கொள்ளுப்பிட்டியிலேயே அமைந்துள்ள சில நகையகங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நகைகளை கொள்வனவு செய்த மூன்று பேரும் விளக்க மறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தங்க ஆபரணக் கொள்ளை குறித்து சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகள் ஊடாக விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.