தடைகளை மீறி மே 18யை அனுஷ்டிக்க வடக்கில் முயற்சி

295

ஆயுதப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூறுவற்கான முயற்சிகளில் வன்னி மாவட்டத்திலுள்ள சில அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தகவலை சிங்களப் பத்திரிகை ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மே 18ஆம் திகதியன்று முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் இந்த நினைவுகூறலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வவுனியா பிரஜைகள் குழு மேற்கொண்டுவருவதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிர்நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூறுவதற்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று அமைப்புகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மாவீரர்களை நினைவுகூறுவற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அனுமதி வழங்கப்படாதிருக்கின்ற நிலையில் குறித்த மூன்று அமைப்புக்களும் இதில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது விஷ வாயு அடங்கிய குண்டுகளை உபயோகித்து நடத்தப்பட்ட தாக்குதலில் 50 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக வவுனியா பிரஜைகள் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருப்பதாகவும் குறித்த சிங்களப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

may18

SHARE