தடை செய்த மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் கைது!

281
மன்னார் – பள்ளிமுனை கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்களை இன்று (வியாழக்கிழமை) காலை கைது செய்த கடற்படையினர், குறித்த மீனவர்களை மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
இந்த 3 மீனவர்கள் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைத்தொகுதிகள் ஐந்தைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போதே கடற்படையினர் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 3 மீனவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர், பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் அவர்களைக் கையளித்துள்ளதோடு கைப்பற்றப்பட்ட வலைத்தொகுதிகளையும் ஒப்படைத்தனர்.
குறித்த 3 மீனவர்களிடமும் வாக்குமூலத்தை பதிவு செய்த கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள், அவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்து அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
SHARE