தட்டிக்கேட்ட தந்தைக்கு நீதிமன்றம் கண்டனம்

214

சுவிட்சர்லாந்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை தட்டிக்கேட்ட தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் இளம் பெண் ஒருவர் மர்ம நபரால் கடத்தப்பட்டு போதை மருந்து தந்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை அந்த மர்ம நபர் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதலுக்கு பின்னர் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தபோது ஒருநாள் அந்த நபரை குறித்த பெண்ணின் தந்தை ஆத்திரத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நீதிபதிகளுக்கு தெரிய வரவே, குறித்த நபர் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி அவர் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். மட்டுமின்றி அவர் 120 நாட்கள் சமூக சேவை செய்து குறித்த தண்டனை காலத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இளம்பெண்ணின் வாழ்க்கையை சிதைத்த இளைஞருக்கு இதுவரை தண்டனை அறிவிக்கவில்லை என்பது மட்டுமல்ல, குறித்த பாலியல் பலாத்காரம் தொடர்பான விசாரணை முடிவுக்கும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த பகுதியில் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE