தண்ணீரில் தள்ளாடும் கருணா…!

268

கருணா, பிள்ளையானென சிங்கள அரசுகள் கைவிடப்பட்டவர்கள் பட்டியல் நீளும் நிலையில் கருணா மதுபோத்தல்களுடன் வீட்டினுள் முடங்கி வாழ்வை தொடர்வதாக கூறப்படுகின்றது. கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவரது கட்சியின் செயலாளர் பிரசாந்தன் போன்றோரது சிறை வாசம் நீண்டு கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் வெறுமனே தனது கைது தொடர்பான அச்சத்தினில் மது போதையினில் அவர் முடங்கியுள்ளார்.அவரது எடுபிடிகளிற்கு அரசு துணைப்படையென்ற பெயரில் வழங்கிய உதவிகளை நிறுத்தி வரும் நிலையில் பரிதாபகரமாக அவரது வாழ்வுள்ளது. பலரும் வேறு கூலி வேலைகள் தேடியோ அரபுநாடுகளை நோக்கியோ படையெடுத்து வருவதாக கூறப்படுகின்றது.

இதனிடையே இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிவநேசதுரை சந்திரகாந்தன் திருகோணமலையிலுள்ள மாகாண சபை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பெர் 29ஆம் நாளன்று நடந்த மாகாண சபை அமர்வில் இறுதியாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டிருந்தார்.

ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை இன்றையதினம் நடைபெறுகின்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்வதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், கடந்த 13ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஆண்டின் 10 ம் மாதம் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE