தந்தூரி உணவுகளை சாப்பிடலாமா? உடலுக்கு நல்லதா?

183

எண்ணெயில் பொரிக்காமல் நெருப்பில் வாட்டி எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காய் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் தந்தூரி வகை உணவுகளை சாப்பிடுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

தந்தூரி உணவுகள் தயாரிக்கப்படுவது எப்படி?

இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேக வைக்கப்படுகிறது.

பின் அந்த இறைச்சியை தீயில் 20 நிமிடங்கள் சுட்டு உணவுகளை தயார் செய்கின்றனர்.

இறைச்சிகள் மீதப்பட்டால், அதை நீண்ட நாட்கள் வைத்து, அதன் சுவையை அதிகப்படுத்த ரசாயனங்கள் கூட கலக்கப்படுகிறது.

தந்தூரி உணவுகள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால் மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது.அதுவே சுவை மற்றும் நிறத்திற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் எண்ணெய், மசாலா பொருட்கள் ஆகியவற்றையும் சேர்த்து நெருப்பில் வாட்டப்படும் போது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் இதில் முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளை பயன்படுத்துவதுடன், மீதமாகும் இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் உடல்நல பாதிப்புகள் அதிகமாகிறது. இவ்வகை உணவுகளை சாப்பிடுவதால் முதலில் அல்சர் பிரச்சனைகள் ஏற்படும்.

அதுவே கடைகளில் ரசாயனங்கள் கலந்து விற்கப்படும் பழைய இறைச்சிகளை அதிகமாக அடிக்கடி சாப்பிட்டால் வயிற்று புற்றுநோய், இதயக் குழாய்களில் அடைப்பு, வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

SHARE