அம்பாந்தோட்டை மாவட்டம், அகுனுகொலபெலச-முரவெலிஹேன இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பல கொலைக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில்ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்படாத சிலரால்தந்தையும் மகனும் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.