பிரான்ஸ் நாட்டில் தந்தை மற்றும் சகோதரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.
நேற்று மாலை 11-வது வட்டக் குடியிருப்பில் இருந்து பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
தகவலை பெற்ற பொலிசார் குறிப்பிட்ட வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர்.
வீட்டிற்கு வெளியே இரண்டு சடலங்கள் ரத்த வெள்ளத்தில் கிடக்க, அதற்கு அருகில் நபர் ஒருவர் அமர்ந்து தியானம் செய்துக்கொண்டு இருந்துள்ளார்.
இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார் உடனே அந்த நபரை கைது செய்தனர். இரண்டு சடலங்களின் கழுத்து முழுமையாக அறுக்கப்பட்டிருந்தது.
பொலிசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நபரின் தந்தை மற்றும் சகோதரன் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் பொலிசாரிடம் பேசுகையில், வீட்டிற்கு வெளியே இருவரையும் கொடூரமாக நபர் கொலை செய்துள்ளார்.
எனது வீட்டு ஜன்னல் வழியாக இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
நபர் கொலை செய்ததும் பிணங்களுக்கு மத்தியில் அமர்ந்துக்கொண்டு கடவுளை வணங்கிக்கொண்டு இருந்தார்.
இதனால் இச்சம்பவத்திற்கு பின்னணியில் தீவிரவாதம் இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என வாக்குமூலம் அளித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள பொலிசார் இந்த இரட்டை கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.