தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட பெண் மரணம்

263

images

குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட பெண் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேராவின் தொடர்பு செயலாளரான லசந்த பெரோவின் மனைவி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டாரகமவைச் சேர்ந்த குறித்தப் பெண் குடும்பத் தகராறு காரணமாக நேற்றைய தினம் தீ மூட்டிக் கொண்டதாகவும், இதன்போது இவரது கணவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காயங்களுக்குள்ளானவர் தற்சமயம் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE