தனது இடத்தை தக்கவைத்து கொண்ட அஸ்வின்

273

ashwin-presser-west-indies-

ஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் பந்து வீச்சு பிரிவில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

872 புள்ளிகள் பெற்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் முதல் இடத்தில் உள்ளார்.

அஸ்வின் 871 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியன் மூலம் ஆண்டர்சன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அவர் 49 புள்ளிகள் முன்னேறி 984 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் யாசீர் ஷா, தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 925 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்தின் ஜோ ரூட் 876 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 868 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 860 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அனுபவ வீரர் யூனிஸ்கான் 5-வது இடத்திலும் உள்ளனர்.

சகலதுறை ஆட்டக்காரர்களில் அஸ்வின் 406 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார். ஷாகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், பிராட் 3-வது இடத்திலும் உள்ளனர்.

அஸ்வினைத் தவிர வேறு எந்த இந்திய பந்து வீச்சாளர்களும் முதல் 10 இடத்திற்குள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE