தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 100 மில்லியன் மானநஷ்டம் கோருகிறார் கெமுனு விஜேரத்ன

261

தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 100 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு தெரிவித்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, அரச வைத்திய அதிகாரிகள் சங்க ஊடக பேச்சாளர் டாக்டர் நவீன் டி சொய்ஷாவுக்கு சட்டத்தரணி ஊடாக நிபந்தனைக் கடிதமொன்றை நேற்று அனுப்பியுள்ளார்.

தனது கௌரவத்துக்கும், நற்பெயருக்கும் பாதிப்பு ஏற்படும் விதத்தில் டாக்டர் நவீன் டி சொய்ஷா ஊடகங்களுக்கு முன்னால் அறிவிப்புச் செய்துள்ளார்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பில் தற்பொழுது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.

கெமுனு விஜேரத்னவும் அந்த வழக்கில் ஒரு தரப்பிலுள்ளவர். இந்தக் கல்லூரியின் பெற்றார் சங்கத்தின் தலைவரும் இவரேயாவார்.

கடந்த 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பில் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் கொடுத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்க பேச்சாளர் கருத்து வெளியிட்டிருந்தார். இதன்போது, தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு நஷ்டஈடு கோரியே வழக்குத் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

SHARE