தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாட கோவா சென்ற வனிதா

231
நயன்தாரா ஸ்டைலில் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா

வனிதா – நயன்தாரா
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3-வது சீசனில் கலந்து கொண்ட பின்னர் மக்களிடம் மீண்டும் பிரபலமானார் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் மட்டும் அல்லாது அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சின்னத்திரை பக்கம் பிசியாக இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

கொரோனா ஊரடங்கில் விஷூவல் எபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர்பாலை திருமணம் செய்து கொண்ட வனிதாவை சர்ச்சைகள் துரத்தின. தன்னைத் துரத்தும் சர்ச்சைகள் அனைத்துக்கும் துணிச்சலுடன் பதிலளித்த வனிதா விஜயகுமார், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தனது 40-வது பிறந்தநாளைக் கொண்டாட கோவா சென்றுள்ளார். வனிதா விஜயகுமாருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
கணவருடன் வனிதாதன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் வனிதா விஜயகுமார், கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளைக் கொண்டாட அவருடன் நயன்தாரா கோவா பயணம் சென்றிருந்த நிலையில், தற்போது பீட்டர்பால் – வனிதா ஜோடியின் பிறந்தநாள் பயணமாக கோவா சென்றுள்ளனர்.
SHARE