தனித்தமிழீழக் குடியரசே தமிழருக்கான ஒற்றைத்தீர்வாகும்.-தமிழ்தேசியப்போராளி மாண்புமிகு நீதியரசர் சரவணராசா

199

 

தமிழ்தேசியப்போராளி மாண்புமிகு நீதியரசர் சரவணராசா
இனப்பெருமையோடும் மொழிப்பெருமையோடும் மண்டியிடாத மானத்தோடும் வீழ்ந்துவிடாத வீரத்தோடும் தன் தீர்ப்பை மாற்ற மறுத்த தமிழ்தேசியப்போராளி மாண்புமிகு நீதியரசர் சரவணராசா
தமிழீழ மக்களின் தொன்மை மண்ணில் சிங்களமக்களால் அத்துமீறி கட்டப்பட்ட புத்தவிகாரை தொடர்பான தீர்ப்பினை அடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராசா அவர்களுக்கு சிங்கள மக்கள் உயிர்அச்சுறுத்தலோடு பல அழுத்தங்களைக் கொடுத்து பதவியை விட்டுவிலகி நாட்டைவிட்டு விரட்டியடித்துள்ளார்கள்.
மாவட்ட நீதிபதி அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு,
தமிழர்களின் தொன்மை மண் குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக சிங்கள மக்களாலும் சிங்கள இனவெறியரசாலும் உயிர் அச்சுறுத்தலும் பல அழுத்தங்களும் நீதிபதி அவர்களுக்கு அடாவடித்தனமாக கொடுக்கப்பட்டது.
சிங்கள இனவெறியைக் கக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் சிங்கள இனவெறியரச பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றிற்கு வெளியிலும் நீதிபதி சரவணராசாவுக்கு கொலை அச்சுறுத்தல் கொடுத்து நீதிபதி வழங்கிய தீர்ப்பை மாற்றி எழுதுமாறு அச்சுறுத்தப்ட்டார்.
அண்மையில் நீதிபதிக்கான காவல்துறைப் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, சிங்கள இனவெறியரச புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்து உயிர் அச்சுறுத்தல் கொடுத்து வந்தனர் என நீதிபதி தெரிவித்திருந்தார்.
சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் 21.09.2023ம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் கொடுத்தார்.
தமிழரின் தொன்மை மண்குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவியை விட்டு சிங்கள மக்களும் சிங்கள இனவெறியரசும் அரசு சார்ந்தவர்களின் உயிர் அச்சுறுத்தலாலும் அழுத்தங்களாலும் என்னை நாட்டைவிட்டு விரட்டியடித்துள்ளார்கள்.
சிங்கள மக்களும் சிங்கள இனவெறியரசாலும் கொடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலால் வலுக்கட்டாயமாக பதவி விலக்கப்பட்டு வெளியேறுவதற்கான சூழலால் பதவி விலகல் கடிதத்தினை கடந்த 23-09-2023 அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.
சிங்கள இனவெறியரசின் கீழ் இயங்கும் நீதி துறை வரலாற்றில் இவ்வளவு துணிச்சல் மிக்க ஒரு தமிழ் நீதிபதியை நாம் அறிந்தது இல்லை தமிழர்களின் தொன்மை மண் குருந்தூர் மலை வழக்கிலும் தமிழ் மக்களின் ஈகைச்சுடர் திலீபனின் நினைவேந்தல் உரிமை சார்ந்த வழக்குகளிலும் அவரது தீர்ப்புகளை பற்றி நாம் பல தடவை அறிந்திருக்கிறோம்.
தமிழர்களின் தொன்மை மண் குருந்தூர்மலை நீதிமன்ற விவாதங்களில் பல சான்று ஆதாரங்களாக இந்த வழக்குகளில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.சிங்கள காவல்துறை, தொல்லியல் திணைக்களம் ,வள திணைக்களம் ,சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன சட்டத்தை மீறி ஆக்கிரமிப்பு செய்யும் சிங்களவர்களுக்கு ஆதரவாக வாதாடிய பொழுதுகளில் கூட வளைந்து கொடுக்காது தனது கட்டளைகள் மூலம் நீதியை நிலைநாட்டிய பெருந்தகை நீதிபதி சரவணராசா.
அண்மையில் ஈகச்சுடர் திலீபன் அவர்களது நினைவேந்தலை தடை செய்ய சிங்கள காவல்துறை செய்த விண்ணப்பத்தை நிராகரித்து தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்தி மாண்புமிகு நீதிபதி ரி.சரவணராசா வழங்கிய கட்டளையின் சிறு பகுதியை இங்கே இணைத்துள்ளோம் .
சிங்கள மக்களால் கடந்த 75 ஆண்டுகளாக 3இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித்தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கிறார்கள்.சிங்கள மக்களின் தமிழின அழிப்பு இன்றும் தொடர்கிறது.ஆகவே சிங்கள மக்களின் ஒற்றையாட்சியின் கீழ் தமிழர்களை அழித்துக்கொண்டிக்கிற ஒற்றைக்கொள்கையோடு தமிழர்கள் இணைந்து வாழ முடியாது.
தமிழீழ மக்களின் கையில் தம்மைத்தாமே ஆளும் தனித்தமிழீழக் குடியரசை உருவாக்க நாம் தொடர்ந்து போராடவேண்டும்.
தனித்தமிழீழக் குடியரசே தமிழருக்கான ஒற்றைத்தீர்வாகும்.
SHARE