தனித்துவ அங்கீகாரம் இல்லையேல் நாடாளுமன்றத்தை முடக்குவோம்! கூட்டு எதிர்க்கட்சி எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 01:09.51 AM GMT ] கூட்டு எதிர்க்கட்சிக்கு தனியான நாடாளுமன்றக்குழு என்ற அங்கீகாரம் வழங்கப்படாது போனால் நாடாளுமன்றத்தை முடக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கப் போவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தருமான ரஞ்சித் சொய்சா நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கூட்டு எதிர்க்கட்சியை தனியான நாடாளுமன்றக் குழுவாக அங்கீகரிக்குமாறு கோரி பல்வேறு தடவைகள் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். எனினும் அவர் இதுவரை அதற்கு செவிசாய்க்கவில்லை. நாளைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது அவர் எங்களை தனியான நாடாளுமன்றக் குழுவாக அங்கீகரிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். சபாநாயகர் அவ்வாறு அங்கீகரிக்கத் தவறும் பட்சத்தில் நாடாளுமன்றத்தை முடக்கும் செயற்பாடுகளை கூட்டு எதிர்க்கட்சி சார்பில் முன்னெடுக்கவுள்ளோம். அது நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்ட செயற்பாடுகளாக மட்டுமன்றி, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளாகவும் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

195

கூட்டு எதிர்க்கட்சிக்கு தனியான நாடாளுமன்றக்குழு என்ற அங்கீகாரம் வழங்கப்படாது போனால் நாடாளுமன்றத்தை முடக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கப் போவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தருமான ரஞ்சித் சொய்சா நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கூட்டு எதிர்க்கட்சியை தனியான நாடாளுமன்றக் குழுவாக அங்கீகரிக்குமாறு கோரி பல்வேறு தடவைகள் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

எனினும் அவர் இதுவரை அதற்கு செவிசாய்க்கவில்லை.

நாளைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது அவர் எங்களை தனியான நாடாளுமன்றக் குழுவாக அங்கீகரிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

சபாநாயகர் அவ்வாறு அங்கீகரிக்கத் தவறும் பட்சத்தில் நாடாளுமன்றத்தை முடக்கும் செயற்பாடுகளை கூட்டு எதிர்க்கட்சி சார்பில் முன்னெடுக்கவுள்ளோம்.

அது நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்ட செயற்பாடுகளாக மட்டுமன்றி, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறும் செயற்பாடுகளாகவும் இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

SHARE