தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்லும் சிறிலங்கா அதிபர்மைத்திரி.!

253

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை 6.20 மணியளவில் UL 207 விமானத்தினூடாக இலண்டன் பயணமானார்.

பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் லண்டன் செல்லவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது புதல்வியான தரணி சிறிசேன, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் கல்வி கற்று பட்டம் பெறவுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்லும் சிறிலங்கா அதிபர், வரும் 16ஆம் நாள் நாடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.maithri

SHARE