தனிமையிலிருந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

292

201604061530200094_Student-commits-suicide-in-Kashmir_SECVPF

நுவரெலியா, லபுக்கலை தோட்டத்தில் உள்ள வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞனின் சடலம் உறவினர்களால் மீட்கப்பட்டது.

குறித்த சம்பவம் காலை வேளையில் நடந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நபர் 23 வயது மதிக்கதக்க வசந்தராஜ் என தெரியவந்துள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருவதோடு, இதற்கான காரணம் இதுவரையும் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞனின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

மேலும், உயிரிழந்த இளைஞன் திருமணம் முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE