ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கேப்டன் ரன்அவுட்
இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே கரவா (Ngarava) அதிர்ச்சி கொடுத்தார்.
அவரது பந்துவீச்சில் அவிஷ்கா பெர்னாண்டோ ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய சதீர சமரவிக்ரமா அதிரடியில் மிரட்டினார்.
குசால் மற்றும் சமரவிக்ரமா இரண்டாவது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்கள் எடுத்தனர். சதீர சமரவிக்ரமா 31 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜனித் லியானகே 24 ஓட்டங்களில் வெளியேற, கேப்டன் குசால் மெண்டிஸ் 46 ஓட்டங்களில் இருந்தபோது ரன் அவுட் ஆனார்.
அசலங்கா சதம் விளாசல்
அதனைத் தொடர்ந்து இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆனால் மறுபுறம் சரித் அசலங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 95 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார். இது அவரது 3வது சதம் ஆகும்.
அசலங்காவின் சதத்தின் மூலம் இலங்கை அணி 279 ஓட்டங்கள் எடுத்தது. ஜிம்பாப்பே அணியின் தரப்பில் கரவா, முஷரபானி மற்றும் பராஸ் அக்ரம் தலா 2 விக்கெட்டுகளும், சிக்கந்தர் ரஸா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.