தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்க, நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்த ஜெயம் ரவி

168

மணிரத்னத்தின், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த, ஜெயம்ரவி, கோலிவுட்டில் தன்முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார். இதன் காரணமாக, அவரை வைத்து படம் இயக்க, பல இயக்குனர்கள் படையெடுத்தனர்.ஆனால், ஜெயம்ரவியோ, ஏற்கனவே தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த, தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போவதாக சொல்லி தவிர்த்து விட்டார்.

அத்தோடு, தனி ஒருவன் முதல் பாகம், ‘சூப்பர் ஹிட்’ படம் என்பதால், அந்த, ‘சென்டிமென்ட்’ காரணமாக, அப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த, நயன்தாராவுக்கு, இரண்டாம் பாகத்தில் நடிக்க, அழைப்பு விடுத்துள்ளார், ஜெயம் ரவி.

SHARE