தனி நபர் தகவல்களை பகிர்வது எல்லை மீறியுள்ளதாக குற்றச்சாட்டு

243

இலவசமாக கிடைக்கும் ஏராளமான மொபைல் அப்பிளிக்கேஷன்கள் தனிநபர் தகவல்களை அதிகமாக பரிமாற்றம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பிளே ஸ்டோரில் காணப்படும் இவ்வாறான இலவச அப்பிளிக்கேஷன்களில் 90 சதவீதமானவை அதன் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்திற்கு இவ்வாறு தகவல்களை திரட்டி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அப்பிளிக்கேஷன்களை உருவாக்குபவர்களுக்கு தமது கொள்கைகள் தொடர்பில் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாகவும், இதனால் அனுமதியின்றிய தகவல் பரிமாற்றம் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்து வருகின்றது.

ஆனால் அதனைத் தாண்டியும் மொபைல் சாதனங்களில் உள்ள தகவல்கள் பெறப்பட்டு வருவதாகவே இக் குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

இவ்வாறு பெறப்படும் தகவல்கள் நபர்களை குறிவைத்து விளம்பரம் செய்தல் மற்றும் அரசியல் விளம்பரங்கள் மேற்கொள்ளல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வயது, பால், இருப்பிடம் உட்பட பல்வேறு தகவல்கள் பகிரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE