தனுஷ் வேலையில்லா பட்டதாரி-2வின் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளார். மேலும், அதே நேரத்தில் ஹாலிவுட் படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானி தீவிர தனுஷ், விஜய் சேதுபதி ரசிகராம்.
இவர் 3 படத்தை பார்த்து முடித்த பிறகு, கிளைமேக்ஸில் தனுஷின் நடிப்பை பார்த்து அரை மணி நேரம் அழுதுவிட்டாராம்.
இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறியுள்ளார், மேலும், கும்கி-2வில் இவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.