தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இதற்குமுன் ஆடுகளம், மயக்கம் என்ன போன்ற படங்களில் இருவரும் ஒன்றாக பணியாற்றினார். ஆனால் ‘மயக்கம் என்ன’ படத்தின் போது ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஜீ.வி.பிரகாஷுடன் தனுஷ் சமாதானம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஜீ.வியின் ஜெயில் படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடினார்.
அதை தொடர்ந்து தற்போது தனுஷின் அசுரன் படத்திற்கு இசையமைக்க ஜீ.வி.பிரகாஷை அனுகியுள்ளார் வெற்றி மாறன்.