தனுஷ்-கௌதம் மேனன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்

155

கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. துருவ நட்சத்திரம், எனை நோக்கி பாயும் தோட்டா படங்களுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இப்போது தனுஷ்-கௌதம் மேனன் படம் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் தனுஷிற்கு அண்ணனாக நடிக்க சசிகுமார் கமிட்டாகி இருக்கிறாராம்.

நடுவில் சில பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜுலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. சசிகுமார் நடித்திருக்கும் அசுரவதம் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜுன் 29) வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE