தனுஷ், சௌந்தர்யாவிற்கு சொன்ன வாழ்த்து இதற்கு தானா?

205

 

கோலிவுட்டையே அதிர்ச்சியாக்கியது சௌந்தர்யாவின் விவாகரத்து விஷயம். இதை அவரே நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் அதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இதை தொடர்ந்து தனுஷ், சௌந்தர்யாவிற்கு வாழ்த்து தெரிவிக்க பலரும் இவர் எதற்கு வாழ்த்து தெரிவித்தார் என்று குழப்பத்தில் இருந்தனர். ஒரு சிலர் விவாகரத்திற்கு தான் வாழ்த்து கூறியதாக நினைத்து கருத்துக்களை வெளியிட தொடங்கிவிட்டனர்.

அதே நேரம் சௌந்தர்யாவிற்கு PETA அமைப்பு விளம்பர தூதராக நியமித்தது, அதற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.

அதற்காக தான் வாழ்த்துக்களை கூறியிருக்க வேண்டும் தனுஷ் என கூறப்படுகின்றது, எது எப்படியோ சமூக வலைத்தளத்தில் கொஞ்சம் கவனம் வேண்டாமா? காரணத்தை கூறாமல் வாழ்த்து சொன்னால் இப்படித்தான் நடக்கும்.

SHARE