தனுஷ் பட இயக்குனரின் 10 சீரியல் பாகமும் ஒரே நாளில் ரிலீஸ்

200

 

நவீன தொழில்நுட்பத்துக்கேற்றபடி சினிமா கலைஞர்களும் தங்களை மாற்றிக்கொள்கின்றனர்.

குறும்படத்திலிருந்து சினிமாவிலும் இயக்குனராக கால்பதித்தவர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி, மாரி என வெற்றிப்படங்களை கொடுத்தவர் தற்போது இணையதளத்துக்காக ஒரு குறுந்தொடரை இயக்கியுள்ளார்.

‘As i am Suffering from Kadhal’ என்ற தொடர் சமகாலத்தில் இருக்கும் காதல் கதைகளையும், அவற்றின் எண்ணற்ற வகைகளையும், அவற்றை சுற்றியும் பின்னப்பட்டுள்ள இந்த தொடர் மொத்தம் 10 பாகங்களை கொண்டது. மூன்று இளம் தம்பதிகள், ஒரு விவாகரத்து பெற்ற மனிதன் அவரது 8 வயது மகள் தான் கதையின் கதாபாத்திரங்கள்.

பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் காதலில் ஒருவருடைய அனுபவங்கள், காதலின் மயக்கம் எப்படி போகப்போக விரக்தியாக மாறுகிறது என்பதை இந்த தொடரில் காமெடியாகாவும் சொல்லியிருக்கிறார்.

காதலில் விழுவது எளிது, காதலில் இருப்பது கடினம். என்ன தான் காதலில் நல்ல அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் முடிவில்லா நம்பிக்கையோடு காதலில் மனிதன் முயற்சிப்பது என்னை கவர்ந்த விஷயம்.

குறும்படம், சினிமாவை தொடர்ந்து இதே விஷயத்தை ஒரு தொடரில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். மிகவும் ஜாலியான இந்த தொடரில் உங்களை நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும், உங்கள் உறவை பற்றி மறுபடியும் சிந்திக்க வைக்கும்.

ஜூன் 16ம் தேதி ஒரே நேரத்தில் இத்தொடரின் பத்து பாகங்களையும் ரிலீஸ் செய்கின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்த தொடர் ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகிறது.

SHARE