காயப்பட்ட பெண் யானையை ஆண் யானை காப்பாற்ற முயற்சி எடுத்த சம்பவம் ஒன்று வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி வருகின்றது.
சுடப்பட்ட யானையை காப்பாற்றும் நோக்கில், ஆண் யானை மனித நடமாட்டம் உள்ள பிரதேசத்திற்கு பெண் யானையை தள்ளிக்கொண்டு வந்துள்ளது.
காயப்பட்ட பெண் யானை நான்கு வயது மதிக்கத்தக்கதாக இருக்கலாம் என்றும் காயப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பொலனறுவை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்து மருத்துவர்கள் இன்று (06) வருகை தரவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள கிரான் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயப்பட்ட யானையை காப்பாற்றும் நோக்கில் மனித நடமாட்டம் உள்ள பிரதேசத்திற்கு கொண்டு வந்த ஆண் யானை அதன் அருகிலயே காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.