பிரித்தானியாவில் கொடிய நோய்த்தொற்று காரணமாக சிறுவனுக்கு இரண்டு கை விரல்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது செயற்கை கை பொருத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
வேல்ஸின் Loughor நகரை சேர்ந்தவர் Hannah Jones (32), இவர் மகன் Alan Gifford (11).
Alan-னுக்கு பிறக்கும் போதே இதயத்தில் கோளாறு இருந்துள்ளது. மூன்று வயதாக இருக்கும் போது கொடிய நோய்த்தொற்று ஏற்பட்டு அவன் கையில் ரத்த ஓட்டம் இல்லாமல் போனது.
Alan-ன் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் அவன் இரு கை விரல்களையும் ஆப்ரேஷன் மூலம் அகற்றினார்கள். எல்லா சிறுவர்களை போல தன்னால் எழுத முடியவில்லை, ஸ்பூன்களை வைத்து உணவு சாப்பிடமுடியவில்லை என Alan ஏங்கியுள்ளான்.
Alan-னுக்கு செயற்கை கை விரல்களை பொருத்த முடிவு செய்த மருத்துவர்கள் அதற்கு £60,000 பணம் செலவாகும் என கூறியுள்ளனர்.
பணத்தை Hannah-ம், குடும்ப நண்பர்களும் சேர்ந்து பல்வேறு வகையில் நன்கொடையாக வசூலித்ததன் விளைவாக Alan-னுக்கு தற்போது செயற்கை கை வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
இனி Alan-வால் வாகனம் ஓட்ட, எழுத, சாப்பிட முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர், இதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளான்.
Hannah கூறுகையில், உடல் கோளாறுகளை Alan தன்னம்பிக்கையோடு எதிர்கொள்வதை பார்த்தால் பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.