பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தன்னுடைய மெழுகுச்சிலையை பார்த்து வியந்துள்ளார்.
உலகின் பல்வேறு இடங்களில் இருக்கும் மேடம் டுசார்ட்ஸ் அருங்காட்சியகத்தில் பல பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன.
இதில் நெய்மரின் மெழுகுச்சிலையும் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஆர்லான்டோவில் இது வைக்கப்படவுள்ளது.
இதை ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா அணியின் பயிற்சி மைதானத்தில் பார்வையிட்ட நெய்மர் மெய்சிலிர்த்தார். தன்னைப் போலவே இருக்கும் அந்த சிலையை பார்த்து வியந்து போன நெய்மர் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
மெழுகுச்சிலையைப் பார்க்க இரட்டை சகோதர்கள் போல் இருப்பதாக கூறிய நெய்மர், இதை ஆர்லான்டோவிற்கு சென்று அடிக்கடி பார்க்க உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.