கடந்த வருடம் தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்களுக்கு மோசமான வருடமாகவே இருந்தது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகர் தாடி பாலாஜி அவர்களை கூறலாம்.
அவருக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டு போலீஸ் நிலையம் வரை கொண்டு சென்றனர். தற்போது தாடி பாலாஜி ஒரு பேட்டியில் தன்னுடைய மனைவி பற்றிய நல்ல விஷயங்களை பேசியுள்ளார்.
அதில் அவர், நான் இப்போது நிறைய கோவில்கள், சித்தர்களை பார்த்து வருகிறேன். அப்படி போனாலும் முதலில் என் மனைவி நித்யாவுக்காக தான் நான் முதலில் வேண்டுகிறேன், அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வருவார்.
என்னை விட அவருக்கு மற்றவர்களுக்கு உதவுகிற குணம் அதிகம். எங்கள் வாழ்க்கையில் பல நாள் நித்யா சம்பாதித்த பணத்தில் குடும்பமே நடந்தது. ஒருவரை பற்றி குறை சொல்லும் போது நல்லதும் கூற வேண்டும் என்று பேசியுள்ளார்.