இளைய தளபதி விஜய் இன்று தமிழ் நெஞ்சங்கள் கொண்டாடும் ஒரு நடிகர். ரஜினிக்கு அடுத்த இடத்தில் பாக்ஸ் ஆபிஸை கலக்கும் நாயகன்.
ஆனால், அவர் இந்த இடத்தை அடைய பல தடைகளை தான் கடந்து வந்திருக்க வேண்டும், இந்நிலையில் விஜய் சினிமாவில் அறிமுகமான போது நடந்த ஒரு சம்பவத்தை தற்போது ரீவேண்ட் செய்து பார்ப்போம்.
விஜய் சினிமாவில் அறிமுகமான போது தமிழகத்தின் பிரபல பத்திரிக்கை ஒன்று விஜய் குறித்து மிகவும் மோசமான ஒரு விமர்சனத்தை எழுதியது, அந்த விமர்சனம் என்பது எல்லை மீறி இருந்தது.
இதையெல்லாம் மனதில் போட்டுக்கொள்ளாமல் விஜய்யின் விடா முயற்சி சில வருடங்கள் கழித்து அந்த பத்திரிக்கையில் அட்டைப்படத்திலேயே விஜய் இடம்பிடித்தார்.
அதைவிட பெரிய விஷயம் என்னவென்றால், அந்த பத்திரிக்கையே விஜய்க்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.