தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவன் நாக்கைக் கடித்து துப்பிய இளம்பெண்!

227

 

கேரள மாநிலத்தின் நிஜாராக்கால் எனும் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், கடந்த திங்கட்கிழமை இரவு, தனது வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ராகேஷ் என்பவர், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள, முத்தம் கொடுக்க வந்த அந்த வாலிபரின் நாக்கை கடித்து இளம்பெண் துண்டாக்கிவிட்டார். இதையடுத்து, துண்டாக்கிய 2 செ.மீட்டர் அளவுக்கொண்ட நாக்குடன், போலீஸ் நிலையம் சென்று புகார் தெரிவித்து உள்ளார். இரத்தம் உறைந்து நாக்குடன் புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணை பார்த்து போலீஸாரே அதிர்ந்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீஸ், ராகேஷை தேடி வந்தது. சம்பவம் நடந்ததும் ராகேஷ் தலைமறைவு ஆகிவிட்டார். ஆனால், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

டிரைவராக பணியாற்றி வரும் ராகேஷ், தன்னுடைய நாக்கு விபத்து ஒன்றில் துண்டாகிவிட்டது என மருத்துவமனையில் பொய் சொல்லி ஆப்ரேஷன் செய்து உள்ளார். அவருக்கு, சிகிச்சை முடிந்துவுடன் போலீஸார் செய்தனர். ராகேஷ் ஏற்கனவே பாலியல் தொல்லை தொடர்பான வழக்குகளில் சிக்கியவன் எனவும் கூறப்படுகிறது.

ராகேஷின் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரை ஒருவாரம் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கேரளாவில் ஒரு பெண்ணை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை, பாதிக்கப்பட்ட பெண் துண்டித்த சம்பவம் நடந்தது. தற்போது, மீண்டும் பாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள மற்றொரு பெண் தைரியமாக செயல்பட்டு உள்ளார்.

SHARE