தன் காதல் தோல்வியை செம்ம கலாட்டாவா சொன்ன விஜய் சேதுபதி

171

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் இந்த வாரம் ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேன் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு கல்லூரிக்கு இந்த படக்குழு சென்றிருந்தது.

அப்போது மாணவர் ஒருவர் விஜய் சேதுபதியிடம் ‘உங்களுடைய கல்லூரி காதல் பற்றி சொல்லுங்கள்’ என்றார்.

அதற்கு விஜய் சேதுபதி ‘நான் ஒரு பெண்ணை 4 வருடம் காதலித்தேன், ஆனால், நான் காதலித்த 4 வருடம் என்னை அந்த பெண்ணிற்கு யார் என்றே தெரியாது.

அதை தொடர்ந்து வீட்டிற்கு அருகே ஒரு பெண்ணை காதலித்தேன், அவரை பக்கத்து வீட்டு பையன் காதலித்து திருமணம் செய்துவிட்டான்.

பிறகு நான் தைரியமாக காதலை சொல்லி அதை ஏற்றுக்கொண்ட பெண்ணையே நான் திருமணம் செய்துக்கொண்டேன்’ என ஜாலியாக பேசினார்.

SHARE