தன் மனைவிக்காக தியேட்டரையே புக் செய்த கணவன்- யார், ஏன், எந்த படம் தெரியுமா?

262

தன் மனைவிக்காக தியேட்டரையே புக் செய்த கணவன்- யார், ஏன், எந்த படம் தெரியுமா? - Cineulagam

சினிமாவில் தான் கற்பனையை மீறி காதல் காட்சிகள் இருக்கும். இந்நிலையில் சினிமாவை போலவே சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இமாசலப் பிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் நகரில் வசிப்பவர் முசாஃபிர். இவருக்கும் கீதாஞ்சலி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இவருடைய மனைவிக்கு சல்மான் கான் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

இதனால் அவரை இம்ப்ரஸ் செய்வதற்காக தங்கள் பகுதியில் ரிலிஸான சுல்தான் படத்தின் முதல் காட்சி டிக்கெட்டுக்கள் அனைத்தயும் முசாஃபிர் வாங்கி, தன் மனைவியை மட்டும் படத்திற்கு அழைத்து சென்றாராம். இந்த செய்தி தான் தற்போது பாலிவுட் மீடியாவில் வைரலாக செல்கிறது. இதேபோல் தான் வல்லவன் படத்தின் சிம்பு, நயன்தாராவை இம்ப்ரஸ் செய்ய இப்படி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE