தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

314

 

 

தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

3a9790d0-7664-4fe7-a7c4-a5ef6f5e154d 0035f601-2821-46ad-a335-9875883e9b55 500d3a52-7651-43e4-bf13-cdf5387d2065 9617be40-9ef4-4885-b058-b257a8fb7b9e

அந்தவகையில் 12.11.2015 அன்று நள்ளிரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 13.11.2015 அன்று காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது.

 

இதன் காரணமாக பொது மக்கள் தங்களுடைய கடிதங்களை பெற்றுக்கொள்வதிலும் அவசர விடயங்களில் ஈடுப்படுவதிலும் முடியாமல் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதேவேளை 14 கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியாக சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE