தப்பி ஓட முயன்ற 35 பேரை உயிரோடு புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

278

கிர்குக்: ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருக்கும் பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற 35 பேரை பிடித்து உயிரோடு குழிதோண்டி புதைத்த கொடூர சம்பவம் ஈராக்கில் நடந்துள்ளது. ஈராக்கின் வட பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. தீவிரவாதிகள் வசம் சிக்கியுள்ள பகுதிகளை மீட்க ராணுவம் கடுமையாக போரிட்டு வருகிறது. ராணுவத் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் கைப்பற்றிய பல நகரங்களில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியேறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிர்குக் நகரத்தில் தங்களிடமிருந்து தப்பியோட முயன்ற பொதுமக்கள் 35 பேரை பிடித்து உயிரோடு குழிதோண்டி புதைத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு முன்னதாக தங்களிடமிருந்து தப்பி செல்ல முயன்ற ஒரு குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக நடுரோட்டில் தீவைத்து எரித்தனர். கொல்லப்பட்டவர்களில் 3 குழந்தைககளும் அடக்கம். கிர்குக் நகரத்தை நாலாபுறமும் ராணுவம் சுற்றி வளைத்து தீவிரவாதிகளை தாக்கி வருகிறது. இதனையடுத்து கடும் ஆத்திரத்தில் உள்ள தீவிரவாதிகள் தப்பியோட முயற்சிப்பவர்களை கொடூரமாக கொன்று வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE