தமக்கான உரிமைகளை வழங்க கோரி மட்டக்களப்பில்செவிப்புலன் வலுவற்றவர்களின் கவன ஈர்ப்பு பேரணி!

258

செவிப்புலன் வலுவற்றவர்களின் உரிமைகளையும் அவர்களின் தேவையினையும் நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க கோரி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

சர்வதேச செவிப்புலன் வலுவற்றோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டம், மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தின் காரியாலயத்தில் ஆரம்பமாகி திருமலை வீதியூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் நடைபெற்றுள்ளது.

இந்த பேரணியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட செவிப்புலன் வலுவற்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சமூகத்தில் தாங்கள் ஒதுக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் தமக்கான முறையான கல்வித்திட்டம் அமுலாக்கம் செய்யப்படும்போது சமூகத்தில் சிறந்த நிலைக்கு தங்களால் வரமுடியும் எனவும் செவிப்புலன் வலுவற்றோர் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களைப்போல் தங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் தமக்கு ஏனையவர்கள் போல் சமவுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள மூவின மக்கள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும் செவிப்புலன்வலுவற்றோர் ஒரே மொழியில் ஒன்றுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கவன ஈர்ப்பு பேரணியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3 625-0-560-320-160-600-053-800-668-160-90-4 625-0-560-320-160-600-053-800-668-160-90-5 625-0-560-320-160-600-053-800-668-160-90-6

 

 

SHARE