தமது தரப்பிற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச

141

தமது தரப்பிற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

எமக்கு எண்ணிக்கைகள் உண்டு அது தொடர்பில் நம்பிக்கை உள்ளது. அதன் அடிப்படையிலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேசிய தேவைகளை கருத்திற் கொண்டே இந்த ஆட்சி மாற்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

எங்களுக்கோ அல்லது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கோ தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் கிடையாது அதன் அடிப்படையல் ஆட்சி மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

SHARE