தமிழகத்திலிருந்து இன்று ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்

266

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின்போது வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்து, அங்குள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கையர்களில் 24 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையகத்தின் உதவியுடன் இவர்கள் இன்று அழைத்துவரப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று நாடு திரும்புபவர்கள், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் எழுவர் பெண்கள் என்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான இலவச பயணச்சீட்டு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாடு திரும்பியதும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

யுத்த சூழ்நிலையில், நாட்டிலிருந்து வெளியேறியவர்களில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் தமிழக அகதி முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர்கள் கட்டம் கட்டமாக அழைத்துவரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.Refugees

SHARE