அதிக எதிர்பார்ப்புடன் வருகிற 19ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா தடைபட்டு போனதால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். அதை சரி செய்யும் விதமாக லியோ படத்தின் இரண்டாவது பாடல் வெளிவந்தது.
இதை தொடர்ந்து லியோவின் டிரைலருக்காக தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
பிசினஸ்
லியோ படத்தின் பிசினஸ் ரூ. 434 கோடி வரை உலகளவில் செய்யப்பட்டுள்ளது என ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தது. இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 101 கோடி வரை பிசினஸ் செய்துள்ளாராம் தயாரிப்பாளர் லலித்.
இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் ரூ. 100 கோடியை கடந்து பிசினஸ் செய்யதது இல்லையாம். இதன்மூலம் தமிழகத்தில் முதல் முறையாக ரூ. 100 கோடிக்கும் மேல் பிசினஸ் செய்யப்பட்ட தமிழ் திரைப்படம் என்ற சாதனையை லியோ செய்துள்ளது.
ஆனால், ரூ. 101 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே லியோ மாபெரும் வெற்றியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.